Information
6. திரு வேங்கட மாலை 067/104 : வேங்கடமே துஞ்சாரைக் கூடு அணனார் முத்து அலையார் குன்று !
கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
வேள் கரமும் அம்பஞ்சார் வேங்கடமே - நீள் கரனார்
தூடணனார்முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
கூடணனார்முத்தலையார் குன்று
தூடணனார்முத்தலையார் - தூடணனார் + முத்தலையார்
கூடணனார்முத்தலையார் - கூடு + அணனார் + முத்து + அலையார்
கோள் ஆடவர்களை வருத்துவதையும்,
கரவு கற்ற அவர்கள் மனதை வஞ்சனையாய்க் கவருவதையும் பயின்ற
விழிக் கோதையர்கள் கண்களை உடைய பெண்களது
பொன் தாளும் அழகிய கால்கள்
அம் பஞ்சு ஆர் அழகிய செம்பஞ்சுக் குழம்பு தடவியதாகவும் ,
வேள் கரமும் மன்மதனது கைகள்
அம்பு அஞ்சு ஆர் பஞ்ச பாணங்கள் கொண்டதாகவும் இருக்கும்
வேங்கடமே திரு வேங்கட மலையே
நீள் கரனார் தூடணனார் பெரிய கரனும் , தூஷணனும் ,
முத்தலையார் துஞ்ச எய்து திரிசிரசும் இறக்கும்படி அம்பு எய்தவரும் ,
துஞ்சாரைக் கூடு அணனார் தூங்காமல் இருந்த இலக்குவனைச் சேர்ந்த அண்ணனும் ,
முத்து அலையார் முத்துக்களை உடைய கடலில் பள்ளி கொண்டவருமான திருமாலின்
குன்று மலை ஆகும்
V.Sridhar