Information
6. திரு வேங்கட மாலை 065/104 :
Information
வேங்கடமே அன்பு உள அமலர்க்கு அண்ணியார் ஊர் !
கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும் , கண் என்றும்
வீறு மருப்பு இணை சேர் வேங்கடமே - நாறும்
துளவமலர்க்கண்ணியார் தொண்டாய்த் தமக்கு அன்பு
உளவமலர்க்கண்ணியார் ஊர்
பதவுரை :
துளவமலர்க்கண்ணியார் - துளவ + மலர்க் + கண்ணியார்
உளவமலர்க்கண்ணியார் - உள + அமலர்க்கு + அண்ணியார்
கூறும் கிளி மொழியார் கொஞ்சிப் பேசும் கிளியின் சொல் போன்று பேசும் பெண்களின்
கொங்கை என்றும் தனங்கள் என்று
வீறு மருப்பு இணை சேர் பெருமை உள்ள யானை தந்தங்கள் இருக்குமிடமும்
கண் என்றும் அவர்களுடைய கண்களின் நோக்கம் எனும்
வீறு மருப்பு இணை சேர்பெருமை உள்ள பெண் மான் இருக்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
நாறும் துளவ மலர்க் கண்ணியார் மணம் வீசும் திருத் துழாய் மலர் மாலை அணிந்தவரும்
தொண்டாய்த் தமக்கு அன்பு உள அடிமை ஆகித் தம்மிடம் பக்தி உள்ள
அமலர்க்கு அண்ணியார் குற்றம் அற்றவர்களுக்கு அருகில் உள்ளவருமான திருமால்
ஊர் இருப்பிடம் ஆகும்
V.Sridhar