Information
6. திரு வேங்கட மாலை 063/104 :
Information
வேங்கடமே - கோதை குழல் சுற்றாததாரணியார் பற்று !
ஓது மறையோர் புறமும் உள்ளும் கலையின் அரு
மேதை அகலாது இருக்கும் வேங்கடமே - கோதை குழல்
சுற்றாததாரணியார் தூய திருத்தாள் ஊன்றப்-
பற்றாததாரணியார் பற்று
பதவுரை :
சுற்றாததாரணியார் - சுற்றாத + தார் + அணியார்
பற்றாததாரணியார் - பற்றாத + தாரணியார்
ஓது மறையோர் புறமும் வேதம் ஓதும் அந்தணர்கள் தமது உடலில்
அரு கலையின் மேதை பெறுவதற்கு அரிய மான் தோலை
அகலா இருக்கும்நீங்காமல் இருக்கும் இடமும்
உள்ளும் தமது மனதில்
கலையின் அரு மேதை சாத்திரங்களின் நுட்பமான அறிவு
அகலா இருக்கும் நீங்காமல் இருக்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
கோதை குழல் சுற்றாத ஆண்டாள் தனது கூந்தலில் சூட்டாத
தார் அணியார் மாலையை தன் மீது அணிந்து கொள்ளாதவரும்
தூய திருத்தாள் ஊன்ற சிறந்த தமது திருவடியை வைக்க
பற்றாத தாரணியார் இடம் போதாத பூமியை உடையவருமான திருமால்
பற்று விரும்பி வாழும் இடம் ஆகும்
V.Sridhar