Information
6. திரு வேங்கட மாலை 061/104 :
Information
வேங்கடமே கூனி மருங்கு உண்டை ஓட்டினான் !
காண் ஐயிலார் சொல் கேட்ட கந்தருவரும் , தவரும்
வீணை இராகத்தை விடும் வேங்கடமே - கோணை
இருங்குண்டையோட்டினான் ஏற்பு ஒழித்தான் கூனி
மருங்குண்டையோட்டினான் வாழ்வு
பதவுரை :
இருங்குண்டையோட்டினான் - இரும் + குண்டை + ஓட்டினான்
மருங்குண்டையோட்டினான் - மருங்கு + உண்டை + ஓட்டினான்
காண் ஐயிலார் பார்க்கின்ற வேல் போன்ற கண்களை உடைய மகளிர்
சொல் கேட்ட கந்தருவரும் இனிய பேச்சைக் கேட்ட கந்தருவர்கள்
வீணை இராகத்தை விடும்இனிமை அற்ற வீணை வாசித்தலை விட்டு விடும் இடமும்
தவரும் தவம் செய்யும் முனிவர்கள்
வீணை இராகத்தை விடும் பயன் இல்லாத ஆசைகளை விடும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
கோணை இரும் குண்டை வலிமை உள்ள பெரிய எருதை
ஓட்டினான் வாஹனமாக உடைய சிவனுடைய
ஏற்பு ஒழித்தான் இரத்தல் தொழிலை ஒழித்தவனும் ,
கூனி மருங்கு உண்டை கண்ணனாய் , கூனியிடம் இருந்த உண்டையை
ஓட்டினான் ஒழித்தவனுமான திருமாலின்
வாழ்வு வாழுமிடம் ஆகும்
V.Sridhar