Information
6. திரு வேங்கட மாலை 060/104 :
Information
வேங்கடமே ஞானியர்கள் குறி எட்டு அக்கரத்தார் !
தேன் இயலும் கூந்தலார் செங்கரமும் , மாதவத்தோர்
மேனியும் , ஐயம்பொழியும் வேங்கடமே - ஞானியர்கள்
தாங்குறியெட்டக்கரத்தார் தாள் உரல் மேல் வைத்து வெண்ணெய் தாங்குறியெட்டக்கரத்தார் சார்பு
பதவுரை :
தாங்குறியெட்டக்கரத்தார் - தாம் + குறி + எட்டு + அக்கரத்தார்
தாங்குறியெட்டக்கரத்தார் - தாங்கு+ உறி + எட்டு + அக் + கரத்தார்
தேன் இயலும் சூடிய மலர்களிலிருந்து சொரிகின்ற தேனை உடைய
கூந்தலார் செங்கரமும் கூந்தல் கொண்ட மகளிரது சிவந்த கரங்கள்
ஐயம் பொழியும் இரப்பவர்க்குப் பிச்சை இடும் இடமும்
மா தவத்தோர் மேனியும் சிறந்த தவம் செய்யும் முனிவர்களது உடம்பு
ஐ அம்பு ஒழியும் மன்மதனது பஞ்ச பாணங்களை ஒழிக்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
ஞானியர்கள் தாம் குறி ஞானம் உள்ளவர்கள் தியானிக்கும்
எட்டு அக்கரத்தார் அஷ்டாக்ஷர மந்திரத்தை உடையவரும் ,
தாள் உரல் மேல் வைத்து தன் காலை உரல் மேல் வைத்து
வெண்ணெய் தாங்கு உறி எட்டு வெண்ணெய் வைத்துள்ள உரலை எட்டிப் பிடித்த
அக் கரத்தார் அழகிய கையை உடைய திருமால்
சார்பு சார்ந்து இருக்கும் இடம் ஆகும்
V.Sridhar