6. திரு வேங்கட மாலை 059/104 : வேங்கடமே புதுப் பூவை வண்ணத்தான் வாழ்வு !
இல்லக் குறத்தியாரும் , யாக்கை நிலை வேட்டவரும் ,
மெல்லக் கிழங்கெடுக்கும் வேங்கடமே - நல்ல
புதுப்பூவைவண்ணத்தான் போர் முகத்துச் செவ்வாய்
மதுப்பூவைவண்ணத்தான் , வாழ்வு
புதுப்பூவைவண்ணத்தான் - புது + பூவை + வண்ணத்தான்
மதுப்பூவைவண்ணத்தான் - மது + பூ + வை + வள் + நத்தான்
இல்லக் குறத்தியாரும் தமது வீட்டில் இருக்கும் குறப் பெண்களும்
மெல்ல , கிழங்கு எடுக்கும் மென்று சாப்பிட கிழங்குகளை தோண்டி எடுக்கும் இடமும்
யாக்கை நிலை வேட்டவரும் தமது உடல் நிலைத்திருக்க விரும்பும் சித்தர்கள்
மெல்லக் கிழம் கெடுக்கும் மெதுவாக மூப்பை ஒழிக்கும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கடமலையெ
நல்ல புதுப் பூவை வண்ணத்தான் சிறந்த புதிய காயாம்பூ போன்ற நிறமுடைய
போர் முகத்துச் செவ்வாய் போர்க்களத்தில் தனது சிவந்த வாயான
மதுப் பூ வை தேனை உடைய தாமரை மலரில் வைத்து ஊதும்
வள் நத்தான் மேன்மையுடைய பாஞ்சஜன்யம் எனும் சங்கத்தை உடைய திருமால்
வாழ்வு வாழும் இடம் ஆகும்
V.Sridhar

Information
பதவுரை :

Comment