6. திரு வேங்கட மாலை 058/104 : வேங்கடமே இரு பாதம் சிவந்தார் வாழ்வு !
மொய் வதன மங்கையர்கள் முன் கையும் , யோகியர்கள்
மெய் வயதும் அஞ்சுகம் ஆர் வேங்கடமே - பெய் வளையார்
பாற்றிருப்பாதஞ்சிவந்தார் பற்றினார் புன் பிறப்பை
மாற்றிருப்பாதஞ்சிவந்தார் வாழ்வு
பதவுரை :
பாற்றிருப்பாதஞ்சிவந்தார் - பால் + திருப்பாது + அஞ்சி + வந்தார்
மாற்றிருப்பாதஞ்சிவந்தார் - மாற்று + இரு + பாதம் + சிவந்தார்
மொய் வதன மங்கையர்கள் அழகு மிக்க முகமுடைய மகளிரது
முன் கையும் முன்னங்கை ,
அம் சுகம் ஆர் அழகிய கிளிகள் உணவு உண்ணும் இடமாகவும்
யோகியர்கள் மெய் வயதும் யோக முனிவர்களுடைய உடலின் ஆயுள் ,
அஞ்சு உகம் ஆர் ஐந்து யுகம் ஆகவும் உள்ள
வேங்கடமே திரு வேங்கட மலையே
பெய் வளையார் பால் திருப்பாது வளைகள் அணிந்த மகளிரிடம் மனம் செலுத்தாமல்
அஞ்சி வந்தார் பற்றினார் அச்சம் கொண்டு தன்னிடம் சரணம் அடைந்தவர்களிடம்
புன் பிறப்பை மாற்று இழிவான ஜென்மத்தை நீக்குகின்ற ,
இரு பாதம் சிவந்தார் சிவந்த இரு திருவடிகளை உடைய திருமால்
வாழ்வு வாழும் இடம் ஆகும்
V.Sridhar