Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 055/104 : வேங்கடமே வன் பாரதம் மĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 055/104 : வேங்கடமே வன் பாரதம் மĬ

    6. திரு வேங்கட மாலை 055/104 : வேங்கடமே வன் பாரதம் முடித்தார் வாழ்வு !

    கேள்வித் துறவோரும் , கேடு அற இல் வாழ்வோரும் ,
    வேள்விக்கினமாற்றும் வேங்கடமே - மூள்வித்து ,
    முன்பாரதமுடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய
    வன்பாரதமுடித்தார் வாழ்வு

    பதவுரை :

    முன்பாரதமுடித்தார் - முன்பா + ரத + முடி + தார்வன்பாரதமுடித்தார் - வன் + பாரதம் + முடித்தார்

    கேள்வித் துறவோரும் ஞானக் கேள்விகளை உடைய துறவிகளும்
    வேள் விக்கினம் மாற்றும் மன்மதன் ஏற்படுத்திய துன்பத்தை நீக்கும் *
    கேடு அற இல் வாழ்வோரும் தீங்கு இல்லாமல் இல்லறத்தில் வாழ்வோரும்
    வேள்விக்கு இன மாற்றும் யாகத்துக்கு இனமான நற்செயல்களைச் செய்யும் *
    வேங்கடமே இடமான திருவேங்கட மலையே
    முன்பா ரத முடி தார் மொய் வேந்தர் முன்பு தேர் , கிரீடம் , மாலை அணிந்த மன்னர்கள்
    வந்து அவிய போர்செய்து இறக்கும்படி
    வன் பாரதம் மூள்வித்து முடித்தார் கொடிய பாரதப்போரை மூட்டி நிறைவேற்றிய திருமாலின்
    வாழ்வு வாழும் இடம் ஆகும்


    * வேள்விக்கினமாற்றும் -
    வெவ்வேறு விதமாய்ப் பிரிந்து இரு பொருள் பட்டதால் பிரிமொழிச் சிலேடை


    V.Sridhar


  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 055/104 : வேங்கடமே வன் பாரதம் ம&

    பிரிமொழிச் சிலேடை பள்ளியில் படிக்காத புதிய விஷயம் கற்றேன் இன்று த்ங்களால் ந்ன்றி

    Comment


    • #3
      Re: 6. திரு வேங்கட மாலை 055/104 : வேங்கடமே வன் பாரதம் ம&

      இது சம்ஸ்க்ருதத்தில் பின்ன பத ச்லேஷா என்று கூறப்படும் ,
      இனி வரும் பாடல்களில் எல்லாம் ஒரு சிலேடை இருக்கும்

      Comment

      Working...
      X