6. திரு வேங்கட மாலை 052/104 : வேங்கடமே அரக்கி மூக்கினொடு காதும் ஈர்ந்தார் வரை !
கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக் கை அம்புலி மேல்
வெம்பி எழும் கோள் அரவு ஆம் வேங்கடமே - தும்பி பல
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு
வார் காதும் ஈர்ந்தார் வரை
பதவுரை :
போர் காதும் ஈர்ந்தார் - போர் + காதும் + ஈர் + தார்
வார் காதும் ஈர்ந்தார் - வார் + காதும் + ஈர்ந்தார்
கொம்பின் இறால் வாங்க மரக் கொம்பில் கட்டிய தேனை எடுப்பதற்கு
நிமிர் குஞ்சரக் கை உயரத் தூக்கிய யானையின் துதிக்கை ,
அம்புலி மேல் வெம்பி சந்திரனைப் பற்றுவதற்கு, அதன் மேல் கோபம் கொண்டு
எழும் கோள் அரவு ஆம் எழுகின்ற கரும் பாம்பு போன்ற ராஹு கிரகத்தைப் போலிருக்கும்
வேங்கடமே திரு வேங்கட மலையே
தும்பி பல போர் காதும் பல வண்டுகள் ஒன்றை ஒன்று தாக்கும்
ஈர்ந்தார் புனை அரக்கி குளிர்ந்த மாலைகளை அணிந்த சூர்ப்பனகையின்
மூக்கினொடு வார் காதும் ஈர்ந்தார் மூக்கையும் , நீண்ட காதையும் அறுத்த திருமாலின்
வரை திரு மலை ஆகும்
V.Sridhar