Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 049/104 : வேங்கடமே காத்து ஆண்ட ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 049/104 : வேங்கடமே காத்து ஆண்ட ī

    6. திரு வேங்கட மாலை 049/104 : வேங்கடமே காத்து ஆண்ட மண் தலத்தார் காப்பு !

    நாகத்தின் மேல் குறவர் நன்கு எறிந்த மாணிக்கம்
    மேகத்தின் மின் புரையும் வேங்கடமே - மாகத்தின்
    மாத்தாண்டமண்டலத்தார் , வாய் உண்டு , உமிழ்ந்து , அளந்து
    காத்தாண்டமண்டலத்தார் காப்பு

    பதவுரை :

    மாத்தாண்டமண்டலத்தார் - மாத்தாண்ட + மண்டலத்தார்
    காத்தாண்டமண்டலத்தார் - காத்து + ஆண்ட + மண் + தலத்தார்

    நாகத்தின் மேல் குறவர் யானையின் மேல் குறவர்
    நன்கு எறிந்த மாணிக்கம் நன்றாக வீசி எறிந்த மாணிக்கங்கள்
    மேகத்தின் மின் புரையும் மேகத்திடையே மின்னல் போல் காணப்படும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    மாகத்தின் மாத்தாண்ட மண்டலத்தார் வானத்தில் சூரிய மண்டலத்தில் இருப்பவரும்
    வாய் உண்டு யுக முடிவில் வாயால் உட்கொண்டு
    உமிழ்ந்து பிரளயம் முடிந்தவுடன் வெளியே உமிழ்ந்து
    அளந்து திரிவிக்ரமனாய் அளந்து
    காத்து விஷ்ணுவாய் பாதுகாத்து
    ஆண்ட ராமனாய் அரசாண்ட
    மண் தலத்தார் பூமியை உடையவரும் ஆன திருமால்
    காப்பு பாதுகாக்கும் இடம் ஆகும்


    V.Sridhar

Working...
X