Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 047/104 : வேங்கடமே அன்புடையார்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 047/104 : வேங்கடமே அன்புடையார்

    6. திரு வேங்கட மாலை 047/104 : வேங்கடமே அன்புடையார் வெற்பு !

    அல்லி மலர்க் காந்தளின் மேல் ஆடும் சுரும்பு இனங்கள்
    மெல்லியலார் கைக்கழங்கு ஆம் வேங்கடமே - மல்லினரைப் பண்டறைந்தவன்புடையார் , பார்த்தனுக்கு தத்துவ நூல்
    விண்டறைந்தவன்புடையார் வெற்பு

    பதவுரை :

    பண்டறைந்தவன்புடையார் - பண்டு + அறைந்த + வன் + புடையார்
    விண்டறைந்தவன்புடையார் - விண்டு + அறைந்த + அன்புடையார்


    அல்லி மலர்க் காந்தளின் மேல் அக இதழ்கள் நிறைந்த செங்காந்தள் மலர் மேல்
    ஆடும் சுரும்பு இனங்கள் அசைந்து ஆடும் வண்டுகளின் கூட்டங்கள்
    மெல்லியலார் கைக்கழங்கு ஆம் பெண்கள் கையில் உள்ள கழற்காய் போன்று உள்ள
    வேங்கடமே திரு வெங்கட மலையே
    மல்லினரைப் பண்டு அறைந்த முன்பு மல்லர்களை அழித்தும்
    வன்பு உடையார் வலிமை கெடாதவரும்
    பார்த்தனுக்கு தத்துவ நூல் அர்ஜுனனுக்கு தத்துவ சாஸ்திரமான பகவத் கீதையை
    விண்டு அறைந்த அன்புடையார் வெளியிட்டுக் கூறிய அன்புடையவருமான திருமாலின்
    வெற்பு திருமலை ஆகும்

    V.Sridhar

Working...
X