6. திரு வேங்கட மாலை 046/104 : வேங்கடமே வேதியன் நாட்டம் கெடுத்தார் ஊர் !
வெள்ளிய கல் மீதே விடர் முளைத்த செங்காந்தள்
வெள்ளி அகல் விளக்கு ஆம் வேங்கடமே - வெள்ளி எனும்
வேதியனாட்டங்கெடுத்தார் , மேதினியைப் பாதலம் என்று
ஓதியனாட்டங்கொடுத்தார் ஊர்
பதவுரை :
வேதியனாட்டங்கெடுத்தார் - வேதியன் + நாட்டம் + கெடுத்தார்
ஓதியனாட்டங்கொடுத்தார் - ஓது + இயல் + நாடு + அங்கு + எடுத்தார்
வெள்ளிய கல் மீதே வெண்ணிறமான வட்டப் பளிங்குக் கல்லின் மேல்
விடர் முளைத்த அக்கல்லின் பிளவில் முளைத்த
செங்காந்தள் செந்நிறமான காந்தள் மலர்
வெள்ளி அகல் விளக்கு ஆம் வெள்ளியில் செய்த தகழியில் ஏற்றப்பட்ட விளக்கு போன்ற
வேங்கடமே திரு வேங்கட மலையே
வெள்ளி எனும் வேதியன் சுக்கிரன் என்னும் அந்தணனுடைய
நாட்டம் கெடுத்தார் கண்ணைப் போக்கினவரும் ,
மேதினியைப் பாதலம் என்று ஓது இயல்பூமியை பாதாளம் எனப்படும் இடத்திலிருந்து
நாட்டம் எடுத்தார் எடுத்தவருமான திருமாலினது
ஊர் திருப்பதி ஆகும்
V.Sridhar