6. திரு வேங்கட மாலை 042/104 : வேங்கடமே மின்னை ஆள் ஆகத்தான் வெற்பு !
சேண் உலவு திங்கள் எனும் சித்தச வேள் வெண் குடைக்கு
வேணு ஒரு காம்பு ஆகும் வேங்கடமே - கோணும் மனத்து
என்னையாளாகத்தான் இன் அருள் செய்தான் கமலம்
மின்னையாளாகத்தான் வெற்பு
பதவுரை :
என்னையாளாகத்தான் - என்னை + ஆள் + ஆக + தான்
மின்னையாளாகத்தான் - மின்னை + ஆள் + ஆகத்தான்
சேண் உலவு திங்கள் எனும் வானத்தில் திரியும் சந்திரன் போன்ற
சித்தச வேள் வெண் குடைக்கு சித்தஜன் ஆன மன்மதனுடைய வெண்கொற்றக் குடைக்கு
வேணு ஒரு காம்பு ஆகும் மூங்கில் ஒரு குடைக்காம்பு போல் இருக்கும்
வேங்கடமே திருவேங்கட மலையே
கோணும் மனத்து திருத்தப்படாத மனத்தை உடைய
என்னை ஆள் ஆக என்னை தனக்கு அடிமை ஆகும்படி ,
தான் இன் அருள் செய்தான் இனிய கருணையை செய்தவனும்
கமலம் மின்னை தாமரையில் இருக்கும் மின்னல் போன்ற திருமகளை
ஆள் ஆகத்தான் ஆளும் மனத்தை உடைய திருமாலின்
வெற்பு திருமலை ஆகும்
V.Sridhar