Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 041/104 : வேங்கடமே பூந்தனத்து Ħ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 041/104 : வேங்கடமே பூந்தனத்து Ħ

    6. திரு வேங்கட மாலை 041/104 : வேங்கடமே பூந்தனத்து அமைந்தான் பொருப்பு !
    அங்கு அதிரும் கான்யாற்று அடர் திவலையால் நனைந்து
    வெங்கதிரும் தண் கதிர் ஆம் வேங்கடமே - செங்கதிர் வேல்
    சேந்தனத்தமைந்தான் திருத்தாதை விற்கு இளையாள்
    பூந்தனத்தமைந்தான் பொருப்பு

    பதவுரை :

    சேந்தனத்தமைந்தான் - சேந்தன் + அத்தம் + ஐந்தான்
    பூந்தனத்தமைந்தான் - பூந்தனத்து + அமைந்தான்

    அங்கு அதிரும் கான்யாற்று அவ்விடத்து ஆரவாரிக்கும் காட்டாறுகளின்
    அடர் திவலையால் நனைந்து நீர்த்துளிகள் தன் மேல் தெரித்ததால் நனைந்த
    வெங்கதிரும் வெப்பமான கிரணங்களை உடைய சூரியனும்
    தண் கதிர் ஆம் குளிர்ந்த கிரணங்களை உடையவன் ஆவதற்கு காரணமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    செங்கதிர் வேல் சேந்தன் சிவந்த ஒளி கொண்ட வேலை உடைய முருகனுக்கும்
    த்தம் ஐந்தான் ஐந்து கைகளை உடைய வினாயகனுக்கும்
    திருத்தாதை விற்கு தந்தையான் சிவனுடைய வில்லிற்கு
    இளையாள் இளையவள் ஆன சீதையின்
    பூந்தனத்து அமைந்தான் அழகிய கொங்கைகளை விரும்பிய திருமாலின்
    பொருப்பு திரு மலை ஆகும்



    --
    V.Sridhar


  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 041/104 : வேங்கடமே பூந்தனத்து &

    திருத்தாதை விற்கு இளையாள்
    சிவதனுசை அநாயசமாக நகர்த்தியவள் சீதை என்ற குறிப்பு ராமாயணத்தில் உள்ளது சரி. இங்கு இளையாள் என்பதற்கு இளையவளான சீதை என்று பொருள் கொடுத்துள்ளீர் இதை சிறிது விள்க்க இயலுமா? தவறாக எண்ணவேண்டம் அறிந்து கொள்ளுமாசையில் கேட்கப்பட்ட கேள்வி இது

    Comment


    • #3
      Re: 6. திரு வேங்கட மாலை 041/104 : வேங்கடமே பூந்தனத்து &

      தங்கள் ஆழமான கேள்விக்கு நன்றி !

      விஸ்வகர்மா செய்த சிவ தனுஸ் நிமி குலத்து தேவராதனிடம் வந்தது.
      பின்பு அக்குலத்தில் தோன்றிய ஜனகனிடம் சீதை குழந்தையாக வந்ததை உலகு அறிந்ததே.


      தனுஸ் வந்த பல ஆண்டுகள் கழித்து தான் சீதை வந்ததால் வில்லிற்கு இளையவள் சீதை என்பது பெரியோர் கருத்து

      தாங்கள் கூறியபடி , பல சாலியான சீதை , வில்லிற்கு இளைக்காதவள் என்றும் பொருள் உரைக்கலாம் .

      வில் கிளையாள் என்று பதம் பிரித்து வில் வந்த குடும்பத்தில் தோன்றியவள் என்றும்
      உரைக்கலாம்




      --
      V.Sridha

      Comment


      • #4
        Re: 6. திரு வேங்கட மாலை 041/104 : வேங்கடமே பூந்தனத்து &

        என் மனதில் தோன்றிய பொருளை சரியாகப்புரிந்து கொண்டு பதில் ஈந்தமைக்கு மிக்க நன்றி தங்கள் பதிலின் முதற்பகுதி யாம் அறிந்திராத செய்தி தயங்காமல் கேட்டதற்கான பரிசாகக்கொள்கிறேன்.நன்றி

        Comment

        Working...
        X