Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 039/104 : வேங்கடமே ஓதி வணங்க அர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 039/104 : வேங்கடமே ஓதி வணங்க அர

    6. திரு வேங்கட மாலை 039/104 : வேங்கடமே ஓதி வணங்க அரியார் ஊர் !

    தண் இலைக் கண் மூங்கில் தலை கொடுத்த தேன் இறால்
    விண் நிலைக் கண் ஆடி ஆம் வேங்கடமே - உள் நிலைக்கும்
    சோதிவணங்கரியார் , தூய சனகாதியரும்
    ஓதிவணங்கரியார் ஊர்

    பதவுரை :

    சோதிவணங்கரியார் - சோதி + வணம் + கரியார்
    ஓதிவணங்கரியார் - ஓதி + வணங்க + அரியார்

    தண் இலைக் கண் மூங்கில் குளிர்ந்த இலையையும் கணுக்களையும் உடைய மூங்கிலின்
    தலை கொடுத்த தேன் இறால் உச்சியிலே கட்டிய தேன் கூடு
    விண் நிலைக் கண் ஆடி ஆம் தேவருலகத்து நிலைக்கண்ணாடி போல் விளங்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    உள் நிலைக்கும் சோதி அன்பர் உள்ளத்தில் நிலைத்திருக்கும்ஒளி வடிவானவரும் ,
    வணம் கரியார் கரிய மேனி கொண்டவரும் ,
    தூய சனகாதியரும் தூய்மையான சனகர் முதலிய யோகிகளும்
    ஓதி வணங்க அரியார் துதித்து வணங்க முடியாதவருமான திருமாலின்
    ஊர் திருப்பதி ஆகும்

    V.Sridhar

Working...
X