Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 036/104 : வேங்கடமே சலம் கவரும் ம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 036/104 : வேங்கடமே சலம் கவரும் ம

    6. திரு வேங்கட மாலை 036/104 : வேங்கடமே சலம் கவரும் மஞ்சு அனையார் சார்பு !

    கண்ணால் வெடித்த கழை முத்தம் கார் துளைத்து
    விண் ஆலியோடு உதிரும் வேங்கடமே - எண்ணார்
    கலங்கவருமஞ்சனையார் - கான்முளையை ஊர்ந்தார்
    சலங்கவருமஞ்சனையார் , சார்பு

    பதவுரை :

    கலங்கவருமஞ்சனையார் - கலங்க + வரும் + அஞ்சனையார்
    சலங்கவருமஞ்சனையார் - சலம் + கவரும் + மஞ்சு + அனையார்

    கண்ணால் வெடித்த கணுக்களில் வெடித்த
    கழை முத்தம் மூங்கில்களிலிருந்து வெளியே சிதறிய முத்துகள்
    கார் துளைத்து மேகத்தைத் துளை செய்து , பின்னர்
    விண் ஆலியோடு மேகத்திலிருந்து வெளிப்படும் மழை நீரோடு
    உதிரும் வேங்கடமே கீழே சிந்தும் இடமான திருவேங்கடமே
    எண்ணார் கலங்க வரும் பகைவர்கள் வருந்தும்படி செல்லும்
    அஞ்சனையார் கான்முளையை அஞ்சனையின் மகன் அனுமான் மேல்
    ஊர்ந்தார் வலம் வந்தவரும்
    சலம் கவரும் நீரை மொண்டு கொண்ட
    மஞ்சு அனையார் கரிய மேகத்தைப் போன்றவருமான திருமால்
    சார்பு சார்ந்துள்ள இடம் ஆகும்


    V.Sridhar



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 09-01-14, 20:43.
Working...
X