6. திரு வேங்கட மாலை 032/104 : வேங்கடமே மாண்டாரை பண்டு அழைத்தார் வாழ்வு !
தெங்கு இள நீர் வீழச் சிதறும் மணியைக் கரிகள்
வெங்கனல் என்று அஞ்சிப் போம் வேங்கடமே - பைங்கழையின்
மாண்டாரைப்பண்டழைத்தார் மா மறையோன் பால் தோன்றி
மாண்டாரைப்பண்டழைத்தார் வாழ்வு
பதவுரை :
மாண்டாரைப்பண்டழைத்தார் - மாண் + தாரை + பண் + தழைத்தார்
மாண்டாரை + பண்டு + அழைத்தார்
தெங்கு இள நீர் வீழ் தென்னை இளநீர்க் காய்கள் விழுவதால்
சிதறும் மணியை சிதறுகின்ற இரத்தினங்களை
கரிகள் யானைகள்
வெங்கனல் என்று அஞ்சிப் போம் கொடிய நெருப்பு என அச்சம் கொண்டு விலகிப் போகும்
வேங்கடமே திருவேங்கட மலையே
பைங் கழையின் மாண் பசுமையான வேய்ங்குழலின் மாண்புள்ள
தாரை பண் தழைத்தார் ஒழுங்கான கீதம் செழிக்க ஊதியவரும் ,
மா மறையோன் பால் தோன்றி சிறந்த அந்தணனிடம் பிறந்து
மாண்டாரை இறந்த மக்களை
பண்டு அழைத்தார் முன்பு கண்ணனாய் மீட்டு அழைத்து வந்தவருமான திருமால்
வாழ்வு வாழும் இடம் ஆகும்
V.Sridhar