6. திரு வேங்கட மாலை 031/104 : வேங்கடமே பத்தரை உள் நினைந்து காப்பார் உவப்பு !
கொம்பு அணியும் தேமாங்குயில் கருடன் போல் கூவ
வெம்பணிகள் புற்று அடையும் வேங்கடமே - வம்பு அணியும்
விண்ணினைந்து காப்பார் மிசை வைத்தார் , பத்தரைத் தம்
உண்ணினைந்து காப்பார் , உவப்பு
பதவுரை :
விண்ணினைந்து - விண்ணின் + ஐந்து
உண்ணினைந்து - உள் + நினைந்து
கொம்பு அணியும் அழகிய கிளைகள் கொண்ட
தேமாங்குயில் இனிய மா மரத்தில் இருக்கும் குயில்
கருடன் போல் கூவ நிரம்ப உண்டதால் கருடன் போல் கூவி ஒலி செய்ய,
வெம் பணிகள் கருடனுக்கு அஞ்சிய கொடிய பாம்புகள்
புற்று அடையும் புற்றினுள் நுழையும் இடமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
வம்பு அணியும் வாசனை மிகவும் கொண்ட
விண்ணின் ஐந்து தேவ லோகத்து ஐந்து மரங்களில் ஒன்றான பாரிஜாதத்தை
காப்பார் மிசை வைத்தார் சத்ய பாமாவிற்காக பூமியில் கொண்டு வந்தவரும் ,
பத்தரை தமது பக்தர்களை
தம் உள் நினைந்து காப்பார் தமது உள்ளத்தில் வைத்துக் காப்பவருமான திருமால்
உவப்பு உவந்து இருக்கும் இடம் ஆகும்
V.Sridhar