Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 029/104 : வேங்கடமே வாணன் தோள்கள

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 029/104 : வேங்கடமே வாணன் தோள்கள

    6. திரு வேங்கட மாலை 029/104 : வேங்கடமே வாணன் தோள்கள் அறுத்தார் வீடு !

    நால விட்ட பொன் ஊசல் நல் நுதலார் உந்து தொறும்
    மேல் அவிட்டம் தொட்டு இழியும் வேங்கடமே - ஆலம் இட்ட
    பொற்புக்களங்கறுத்தார் போர் சரிய , வாணன் தோள்
    வெற்புக்களங்கறுத்தார் வீடு

    பதவுரை :

    பொற்புக்களங்கறுத்தார் - பொற்பு + களம் + கறுத்தார்
    வெற்புக்களங்கறுத்தார் - வெற்புக்கள் + அங்கு + அறுத்தார்

    நால விட்ட பொன் ஊசல் தொங்க விடப்பட்ட பொன்னாலான ஊஞ்சல்
    நல் நுதலார் அழகிய நெற்றியை உடைய பெண்கள்
    உந்து தொறும் வீசித் தள்ளி ஆட்டும் தோறும்
    மேல் அவிட்டம் தொட்டு வானத்தில் உள்ள அவிட்ட நக்ஷத்திரத்தின் மீது பட்டு
    இழியும் வேங்கடமே இறங்கும் இடமான திரு வேங்கட மலையே ,
    ஆலம் இட்ட நஞ்சை உட்கொண்டதால்
    பொற்பு களம் கறுத்தார் பொலிவான கழுத்து கரிய நிறமாக மாறிய சிவன்
    போர் சரிய போரிலே பின் வாங்க ,
    வாணன் தோள் வெற்புக்கள் வாணாசுரனுடைய மலை போன்ற தோள்களை
    அங்கு அறுத்தார் அப்போது அறுத்தவரான திருமால்
    வீடு வசிக்கும் இடம் ஆகும்


    V.Sridhar
Working...
X