6. திரு வேங்கட மாலை 025/104 : வேங்கடமே தீ முக நாகத்து இருப்பார் காப்பு !
தேன் ஏறி , தேன் வைக்கும் திண் கழை மேல் விண் மகர
மீன் ஏறி வேள் கொடி ஆம் வேங்கடமே - வான் ஏறி
தீமுகனாகத்திருப்பார் சேவடிக்கு ஆள் ஆனவனைக்-
காமுகனாகத்திருப்பார் காப்பு
பதவுரை :
தீமுகனாகத்திருப்பார் - தீ + முக + நாகத்து + இருப்பார்
காமுகனாகத்திருப்பார் - காமுகனாக + திருப்பார்
தேன் ஏறி வண்டுகள் உயரப் பறந்து சென்று
தேன் வைக்கும் தேனைச் சேர்த்து வைக்கும்
திண் கழை மேல் வலிய மூங்கில் மேல்
விண் மகர மீன் ஏறி வானத்தில் செல்லும் சுறாமீன் வடிவமான மகர ராசி தங்கும்போது
வேள் கொடி ஆம் மன்மதனுடைய சுறா மீன் கொடி போல் தோன்றும்
வேங்கடமே திரு வேங்கட மலையே
வான் ஏறி பரம பதத்தில்
தீ முக நாகத்து நஞ்சு ஆகிய அக்னியை சொரியும் ஆதி சேஷன் மேல்
இருப்பார் இருப்பவரும்
சேவடிக்கு ஆள் ஆனவனை தன் சிவந்த திருவடிகளுக்கு அடிமை ஆனவர்களை
காமுகனாக திருப்பார் காமம் உடையவனாகச் செய்யாதவரும் ஆன
காப்பு திருமால் உயிர்களைப் பாதுகாக்குமிடம் ஆகும்
V.Sridhar