6. திரு வேங்கட மாலை 024/104 : வேங்கடமே - கல்லை அரிவை வடிவாக்கினான் வெற்பு !
கொல்லைக் குறவர் குளிர் மதி மானைக் ககன
வில்லைக் குனித்து எய்யும் வேங்கடமே - கல்லை
அரிவைவடிவாக்கினான் அன்னம் ஆய் வேத
விரிவைவடிவாக்கினான் வெற்பு
பதவுரை :
அரிவைவடிவாக்கினான் - அரிவை + வடிவு + ஆக்கினான் விரிவைவடிவாக்கினான் - விரிவை + வடி + வாக்கினான்
கொல்லைக் குறவர் தினைக் கொல்லை காக்கும் குறவர்கள்
குளிர் மதி மானை குளிர்ந்த சந்திரனில் உள்ள மான் வடிவத்தை
ககன வில்லை வானத்தில் இருக்கும் வில் வடிவமான தனுர் ராசியை
குனித்து எய்யும் வில்லாக வளைத்து , அம்பு எய்ய முயலும் இடமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
கல்லை சாபத்தால் கல் வடிவம் ஆன அகலிகையை
அரிவை வடிவாக்கினான் ராமனாய் பெண் வடிவம் ஆக மாற்றியவனும்
அன்னம் ஆய் அன்னப் பறவை வடிவம் ஆகி
வேத விரிவை வடி விரிவான வேதத்தைத் தெளிவாகக் கூறிய
வாக்கினான் வெற்பு சொல்லை உடைய திருமாலின் மலை ஆகும்
V.Sridhar