Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 023/104 : வேங்கடமே - என் உள் அரவி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 023/104 : வேங்கடமே - என் உள் அரவி

    6. திரு வேங்கட மாலை 023/104 : வேங்கடமே - என் உள் அரவிந்தப் போது அகத்தான் காப்பு !

    மன்னு குடிக் குறவர் வான் ஊர் துலாத்து இடையே
    மின்னு மணி நிறுக்கும் வேங்கடமே - என் உள்
    அரவிந்தப்போதகத்தான் அன்பால் அழைத்த
    கரவிந்தப்போதகத்தான் காப்பு

    பதவுரை :

    அரவிந்தப்போதகத்தான் - அரவிந்த + போது + அகத்தான்
    கரவிந்தப்போதகத்தான் - கர +விந்த + போதகத்தான்

    மன்னு குடிக் குறவர் குறிஞ்சி நிலத்தில் இருக்கும் குறவர்கள்
    வான் ஊர் வானத்தில் செல்லுகின்ற
    துலாத்து இடையே தராசு வடிவமான துலா ராசியிடத்தில்
    மின்னு மணி நிறுக்கும் பிரகாசமான இரத்தினங்களை நிறுத்து , எடை போடும் இடமான
    வேங்கடமே வேங்கட மலையே
    என் உள் அடியேனுடைய மனமாகிய
    அரவிந்த போது அகத்தான் தாமரை மலரில் இருப்பவனும்
    அன்பால் அழைத்த பக்தியுடன் "ஆதி மூலமே" என்று அழைத்த
    கர விந்த துதிக்கையுடைய விந்திய மலை போன்ற
    போதகத்தான் யானைக்கு அருளிய திருமால்
    காப்பு உயிர்களைப் பாதுகாக்கும் இடம் ஆகும்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 06-01-14, 20:52.
Working...
X