Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 015/104 : வேங்கடமே காரின் வடிவா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 015/104 : வேங்கடமே காரின் வடிவா

    6. திரு வேங்கட மாலை 015/104 : வேங்கடமே காரின் வடிவாகனத்தான் வரை !

    தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு , பொன் மலையும்
    வெள்ளி மலையும் பணியும் வேங்கடமே - புள்ளின்
    கொடிவாகனத்தான் ; குளிர்ந்த இருண்ட காரின்
    வடிவாகனத்தான் ; வரை

    பதவுரை :

    கொடிவாகனத்தான் - கொடி + வாகனத்தான்
    வடிவாகனத்தான் - வடிவு + ஆகன் + நத்தான்

    தெள்ளியது ஓர் வீடு தெளிவுள்ள ஒப்பற்ற பரம பதத்தை
    அருளும் சீர் கேட்டு கொடுத்து அருளும் சிறப்பைக் கேள்விப் பட்டு
    பொன் மலையும் பொன் மயமான மஹா மேருவும் ,
    வெள்ளி மலையும் வெள்ளி மயமான கைலாயமும்
    பணியும் வேங்கடமே வணங்குகின்ற வேங்கடமே
    புள்ளின் பறவை அரசன் ஆகிய கருடனை
    கொடி வாகனத்தான் கொடி ஆகவும் , வாஹனம் ஆகவும் உடையவனும் ,
    குளிர்ந்த இருண்ட காரின் குளிர்ச்சி உடைய கரிய மேகத்தின்
    வடிவு ஆகன் வடிவு போன்ற திருமேனி கொண்டவனும் ,
    நத்தான் பாஞ்ச ஜன்யம் எனும் சங்கத்தை உடையவனுமான திருமாலின்
    வரை மலை ஆகும்

    V.Sridhar

Working...
X