Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 012/104 : வேங்கடமே பாம்பு அணையா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 012/104 : வேங்கடமே பாம்பு அணையா

    6. திரு வேங்கட மாலை 012/104 : வேங்கடமே பாம்பு அணையார் காப்பு !

    துய்ய செம் பொற் கோயில் சுடர் எறிப்பக் கண் முகிழ்த்து ,
    வெய்யவன் தேர் மா இடறும் வேங்கடமே ஐ இரு நூறு
    ஆனமுகப்பாம்பணையார் ஆன் நிரைப் பின் ஊதி வரும்
    கானமுகப்பாம்பணையார் காப்பு

    பதவுரை :

    ஆனமுகப்பாம்பணையார் - ஆன முகப் பாம்பு அணையார்
    கானமுகப்பாம்பணையார் - கானம் உகப்பு ஆம் பணையார்

    துய்ய செம் பொற் சுத்தமான சிவந்த பொன் மயமான
    கோயில் சுடர் எறிப்பதிருக் கோயிலினுடைய ஒளி வீசுவதால்
    கண் முகிழ்த்து கண்கள் மூட பெற்று
    வெய்யவன் தேர் மா சூரியனுடைய தேரில் கட்டப்பட்ட குதிரைகள்
    இடறும் வேங்கடமே கால் இடறுவதற்குக் காரணமான வேங்கடமே ,
    ஐ இரு நூறு ஆன முக ஆயிரம் முகங்கள் கொண்ட
    பாம்பு அணையார் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவரும் ,
    ஆன் நிரைப் பின் பசுக் கூட்டங்களின் பின்னால்
    ஊதி வரும் கானம் குழல் ஊதி வரும் பாடல்
    உகப்பு ஆம் பணையார் மகிழ்ச்சி கொடுக்கும் குழலை உடையவருமான திருமால்
    காப்பு பாதுகாக்கும் இடம் ஆகும்

    V.Sridhar

Working...
X