6. திரு வேங்கட மாலை 011/104 : வேங்கடமே கோகனகம் பத்தினார் குன்று
புள் அரவம் , நீர் அரவம் , போர் மா அரவம் அறா
வெள் அரவ வெற்பாகும் வேங்கடமே - ஒள் அரியாய்
மா கன கம்பத்தினார் வாய் , கண் , கை , உந்தி , பதம்
கோகனகம் பத்தினார் குன்று
பதவுரை :
புள் அரவம் பறவைகளின் ஒலியும் ,
நீர் அரவம் அருவி நீர் பெருகும் ஒலியும் ,
போர் மா அரவம் அறா போர் செய்யும் யானைகளின் ஒலியும் நீங்காமல்
வெள் அரவ வெற்பாகும் சுத்தமான அரவ வெற்பு எனப்படும்
வேங்கடமே வேங்கடமே
ஒள் அரியாய் விளங்கும் சிங்க வடிவமாய்
மா கன கம்பத்தினார் பெரிய கம்பத்திலிருந்து தோன்றியவரும்
வாய் , கண் , கை வாய் ஒன்றும் , கண் இரண்டும் , கைகள் நான்கும் ,
உந்தி , பதம் நாபி ஒன்றும் , பாதம் இரண்டும் ஆகிய
கோகனகம் பத்தினார் குன்று பத்து தாமரைகளை உடைய திருமாலின் மலை ஆகும்
V.Sridhar

Comment