Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 011/104 : வேங்கடமே கோகனகம் பத்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 011/104 : வேங்கடமே கோகனகம் பத்த

    6. திரு வேங்கட மாலை 011/104 : வேங்கடமே கோகனகம் பத்தினார் குன்று

    புள் அரவம் , நீர் அரவம் , போர் மா அரவம் அறா
    வெள் அரவ வெற்பாகும் வேங்கடமே - ஒள் அரியாய்
    மா கன கம்பத்தினார் வாய் , கண் , கை , உந்தி , பதம்
    கோகனகம் பத்தினார் குன்று

    பதவுரை :

    புள் அரவம் பறவைகளின் ஒலியும் ,
    நீர் அரவம் அருவி நீர் பெருகும் ஒலியும் ,
    போர் மா அரவம் அறா போர் செய்யும் யானைகளின் ஒலியும் நீங்காமல்
    வெள் அரவ வெற்பாகும் சுத்தமான அரவ வெற்பு எனப்படும்
    வேங்கடமே வேங்கடமே
    ஒள் அரியாய் விளங்கும் சிங்க வடிவமாய்
    மா கன கம்பத்தினார் பெரிய கம்பத்திலிருந்து தோன்றியவரும்
    வாய் , கண் , கை வாய் ஒன்றும் , கண் இரண்டும் , கைகள் நான்கும் ,
    உந்தி , பதம் நாபி ஒன்றும் , பாதம் இரண்டும் ஆகிய
    கோகனகம் பத்தினார் குன்று பத்து தாமரைகளை உடைய திருமாலின் மலை ஆகும்



    V.Sridhar


  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 011/104 : வேங்கடமே கோகனகம் பத்&#2

    அரவம் (ஒலி) நிறைந்த அரவ (சேஷ) மலை என்னும் சிலேடை கவனிக்கத்தக்கது

    Comment

    Working...
    X