Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 007/104 : வேங்கடமே உள் மயக்கம் &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 007/104 : வேங்கடமே உள் மயக்கம் &#

    6. திரு வேங்கட மாலை 007/104 : வேங்கடமே உள் மயக்கம் தேற்றுவித்தான் ஊர் !

    நாலு திசை முகமும் நண்ணுதலால் , ஒண் கமல-
    மேல் உறலால் , வேதாவாம் வேங்கடமே - சால் உறையும்
    மண் மயக்கம் தேற்றுவித்தான் மாற்றுதல் போல் ஆரியனால்
    உண் மயக்கம் தேற்றுவித்தான் ஊர்

    பதவுரை :

    மண் மயக்கம் தேற்றுவித்தான் - மண் மயக்கம் தேற்று வித்தால்
    உண் மயக்கம் தேற்றுவித்தான் - உள் மயக்கம் தேற்றுவித்தான்

    நாலு திசை முகமும் பிரம்மாவிற்கு நான்கு திசைகளிலும் முகங்கள்
    (வேங்கடத்திற்கு நான்கு திசைகளிலிரிந்தும் பக்தர்கள் வருவதால் )
    நண்ணுதலால் பொருந்தி இருத்தலால் ,
    ஒண் கமலம் மேல் உறலால் பிரம்மா பிரகாசமான தாமரை மேல் இருப்பதால்
    (வேங்கடத்தின் மேல் தாமரை உள்ள ஆறுகள் இருப்பதாலும் )
    வேதாவாம் வேங்கடமே பிரமனைப் போன்ற வேங்கடமே
    சால் உறையும் பாத்திரத்தில் உள்ள
    மண் மயம் கம் மண் மயமான நீரை
    தேற்று வித்தால் தேற்றாங்கொட்டையால்
    மாற்றுதல் போல் தெளியச் செய்வது போல்
    ஆரியனால்
    ஆச்சா
    ரியனைக் கொண்டு
    உள் மயக்கம் என் மனத் தடுமாற்றத்தை
    தேற்றுவித்தான் தெளியச் செய்தவனான திருமாலினது
    ஊர் இருப்பிடம் ஆகும்

    V.Sridhar


    Last edited by sridharv1946; 28-12-13, 18:59.
Working...
X