Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 006/104 : தரு மா தரை நட்டான் ஆயரĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 006/104 : தரு மா தரை நட்டான் ஆயரĮ

    6. திரு வேங்கட மாலை 006/104 : தரு மா தரை நட்டான் ஆயர் தரு மாதரை நட்டான்!

    மாலைக் கோலித் திரியும் வையகத்தோர் தம் பிறவி
    வேலைக்கு ஓர் வங்கம் ஆம் வேங்கடமே - சோலைத்
    தரு மாதரை நட்டான் தண் முல்லை ஆயர்
    தரு மாதரை நட்டான் சார்பு

    பதவுரை :

    தரு மாதரை நட்டான் - தரு மா தரை நட்டான்
    - தரு மாதரை நட்டான்

    மாலைக் கோலித் திரியும் மயக்கம் அடைந்து அலையும்
    வையகத்தோர் தம் பூமியில் உள்ளவர்களுடைய
    பிறவி வேலைக்கு பிறப்பு ஆகிய கடலுக்கு
    ஓர் வங்கம் ஆம் வேங்கடமே ஒரு மரக்கலம் போன்ற வேங்கடமே ,
    சோலைத் தரு தேவ நந்தவனத்தில் இருந்த பாரிஜாத மரத்தை
    மா தரை நட்டான் பெரிய பூமியில் கொண்டு வந்து நட்டவனும் ,
    தண் முல்லை ஆயர் தரு குளிர்ந்த முல்லை நிலத்தில் வாழும் இடையர்கள் பெற்ற
    மாதரை நட்டான் பெண்களோடு நட்பாக கூடியவனுமான திருமால்
    சார்பு விரும்பி சார்ந்திக்கும் இடம் ஆகும்

    V.Sridhar

Working...
X