Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 004/104 : பரமபத நாட்டினான் சிரம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 004/104 : பரமபத நாட்டினான் சிரம

    6. திரு வேங்கட மாலை 004/104 : பரமபத நாட்டினான் சிரமபதம் நாட்டினான் !

    பொன்னும் மணியும் பொலிந்து ஓங்கி பார் மகட்கு
    மின்னும் மணி முடியாம் வேங்கடமே - மன்னும்
    பரமபத நாட்டினான் பை அரவின் சூட்டில்
    சிரமபதம் நாட்டினான் சேர்வு

    பதவுரை :

    நாட்டினான் - நாட்டை உடையவன்
    - நிறுத்தினான்

    பொன்னும் மணியும் பொன்னும் நவரத்தினங்களும்
    பொலிந்து ஓங்கி விளங்கி தான் உயர்ந்து இருத்தலால்
    பார் மகட்கு பூமிப் பிராட்டிக்கு
    மின்னும் மணி முடியாம் விளங்கும் இரத்தின கிரீடம் போல் இருக்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையானது
    மன்னும் பரமபத நாட்டினான் நிலையான பரம பதம் எனும் நாட்டை உடையவனும்
    பை அரவின் சூட்டில் படத்தை உடைய காளியன் எனும் பாம்பின் தலை மேல்
    சிரமபதம் நாட்டினான் ஆடும் பயிற்சி செய்யும் திருவடிகளை நிறுத்திய எம்பெருமான்
    சேர்வு சேர்ந்த இடம் ஆகும்

    V.Sridhar

Working...
X