5. திருவரங்கத்து மாலை - 114/114 :தற்சிறப்புப் பாயிரம்
மனிதக் கவி மொழியா , மங்கை வாழ் மணவாள வள்ளல்
புனிதக் கவி கொண்டு , மாலை செய்தான் , புயல் போல் முழங்கும்
தொனி தக்க சங்கம் , திருச் சக்கரம் , சுடர் வாள் , முசலம் ,
குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் பொற் கோயிலுக்கே
பதவுரை :
புயல் போல் முழங்கும் மேகம் போல் முழங்குகின்ற
தொனி தக்க சங்கம் பேரொலி மிக்க அழகிய பாஞ்ச ஜன்யம் எனும் சங்கத்தையும் ,
திருச் சக்கரம் சுதர்சனம் எனும் சக்கரத்தையும் ,
சுடர் வாள் ஒளியை உடைய நந்தகம் எனும் வாளையும் ,
முசலம் கௌமோதகி எனும் கதையையும் ,
குனி தக்க சார்ங்கம் வளைவுள்ள சார்ங்கம் எனும் வில்லையும்
தரித்தார் அரங்கர் தாங்குபவரான திரு அரங்க நாதரது
பொற் கோயிலுக்கே அழகிய கோவிலுக்கு ,
மனிதக் கவி மொழியா நர ஸ்துதியாக கவி பாடாத
மங்கை வாழ் திரு மங்கையில் வாழ்கின்ற
மணவாள வள்ளல் அழகிய மணவாள தாசன்
புனிதக் கவி கொண்டு பரிசுத்தமாகிய பாக்களால்
மாலை செய்தான் ஒரு மாலையைச் செய்தான் .
************************************************
திருவரங்கத்து மாலை முற்றிற்று

V.Sridhar