Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 113/114 : நாமங்கள் நாவைப் பī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 113/114 : நாமங்கள் நாவைப் பī


    5. திருவரங்கத்து மாலை - 113/114 : நாமங்கள் நாவைப் பரிசுத்தம் பண்ணியவே !


    "ஆவைக் கல் - ஆவை எதிர் " என்று சொல்லி அழுக்கு அடைந்த
    நாவைப் பரிசுத்தம் பண்ணியவே - கஞ்ச நஞ்சன் விட்ட
    கோவை , சகட்டை , பகட்டை , பொருதிய கோயிலில் வாழ்
    தேவை பகர்ந்த செஞ்சொல் - திரு நாமங்கள் சிற்சிலவே

    பதவுரை :

    கஞ்ச நஞ்சன் விட்ட நஞ்சு போன்ற கொடிய கம்சன் அனுப்பிய
    கோவை சகட்டை எருதையும் , சகடாசுரனையும் ,
    பகட்டை பொருதிய குவலயாபீடம் எனும் யானையையும் கொன்று வென்ற
    கோயிலில் வாழ் தேவை திருவரங்கம் பெரிய கோயிலில் இருக்கும் ரங்க நாதனை
    பகர்ந்த செஞ்சொல் சொல்லித் துதித்த
    திரு நாமங்கள் சிற்சிலவே சில சில சொற்கள் ஆகிய திரு நாமங்கள்
    ஆவை கல் - ஆவை எதிர் "உண்மையான பசுவும் , கல்லால் ஆன பசுவும் சமம்"
    என்று சொல்லி அழுக்கு அடைந்த என்று கூறி அசுத்தம் ஆகிய
    நாவைப் பரிசுத்தம் பண்ணியவே எனது நாக்கை முழுதும் சுத்தம் ஆக்கின


    V.Sridhar
Working...
X