Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 112/114 : எனக்கு ஏது இனி வேணĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 112/114 : எனக்கு ஏது இனி வேணĮ

    5. திருவரங்கத்து மாலை - 112/114 :எனக்கு ஏது இனி வேண்டுவதே ?

    நீடும் திகிரிப் படையாய் ! உனைக் கற்று , நின்னை என்றும்
    பாடும்படித் தமிழ்ப் பாடல் தந்தாய் ; பழ நான் மறை நூல்
    தேடும் திரு அரங்கா ! அடியேன் உயிர் செல்லும் அந்நாள் ,
    வீடும் தர இருந்தாய் ; எனக்கு ஏது இனி வேண்டுவதே ?

    பதவுரை :

    நீடும் திகிரிப் படையாய் பகைவரை அழிக்க விரையும் சக்ராயுதத்தை உடையவனே !
    பழ நான் மறை நூல் பழைய நான்கு வேத சாஸ்திரங்கள் எல்லாம்
    தேடும் திரு அரங்கா தேடுகின்ற திரு அரங்க நாதா !
    உனைக் கற்று உன்னை நன்கு படித்து
    நின்னை என்றும் பாடும்படி எந்நாளும் அடியேன் உன்னைப் பாடித் துதிக்கும்படி
    தமிழ்ப் பாடல் தந்தாய் தமிழ்ப் பாடல்களைக் கொடுத்து அருளினாய் ;
    அடியேன் உயிர் செல்லும் அந்நாள் அடியேன் உயிர் பிரியும் காலத்தில்
    வீடும் தர இருந்தாய் அடியேனுக்கு வீடு பேற்றையும் கொடுக்க இருந்தாய் ;
    எனக்கு ஏது இனி வேண்டுவதே இனிமேல் அடியேனுக்கு ஒன்றும் பெற வேண்டியதில்லை


    V.Sridhar

    Last edited by sridharv1946; 26-12-13, 12:58.
Working...
X