5. திருவரங்கத்து மாலை - 110/114 :அரங்கேச ! அடிக்கே வர வைத்து அருளே !
தொடை மாறனும் , தமிழ் சொல் மாறனும் , தொழ , துத்தி வெள்ளைக்-
குடை மாசுணத்தில் துயில் அரங்கேச ! குலவு வை வேல் படை மாறு
கொண்ட மைக் கண்ணியர் பால் வைத்த பாச நெஞ்சை
மடை மாறி , உன் தன் திருவடிக்கே வர வைத்து அருளே
பதவுரை :
தொடை மாறனும் வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனும் ,
தமிழ் சொல் மாறனும் தொழ தமிழ்ப் பாடல்களைப் பாடும் நம்மாழ்வாரும் தொழும்படி
துத்தி வெள்ளைக்குடை படப் புள்ளிகளை உடைய , வெண் குடை போல் கவிழ்ந்த
மாசுணத்தில் துயில் அரங்கேச ஆதி சேஷன் மேல் பள்ளி கொள்ளும் அரங்க நாதா !
குலவு வை வேல் படை விளங்கும் கூர்மையான வேலாயுதத்த்தோடு
மாறு கொண்ட பகைமை கொண்ட
மைக் கண்ணியர் பால் மை பூசிய கண்களை உடைய பெண்ணிடம்
வைத்த பாச நெஞ்சை மடை மாறி வைத்த அன்புள்ள எனது மனதை மாற்றி
உன் தன் திருவடிக்கே உனது திருவடிகளுக்கே
வர வைத்து அருளே ஆட்படும்படி எனக்கு அருள் செய்வாயாக !
V.Sridhar