5. திருவரங்கத்து மாலை - 109/114 :தார் அரங்கா ! என் தலைப் பால் கழல் அருள் !
வலை , பால் , விடம் , பிணைக் கண்ணியர் போகத்தில் மாலுறும் என்
தலைப்பால் கழல் அருள் - தார் அரங்கா ! பல தாயார் தந்த
முலைப்பால் கடல் உன் திருக் கழல் ஆணி வெண் முத்து எறியும்
அலைப்பால் கடலில் அளவு ஆம் எனின் , மற்று அதுவும் அன்றே
பதவுரை :
தார் அரங்கா திருத் துழாய் மாலை அணிந்த திரு அரங்கா !
பல தாயார் தந்த பல பிறவிகளிலும் , பல தாயார்கள் தந்த
முலைப்பால் கடல் முலைப் பாலின் வெள்ளம்
உன் திருக் கழல் உனது திருவடிகளில்
ஆணி வெண் முத்து எறியும் சிறந்த வெள்ளிய முத்துகளை வீசுகின்ற
அலைப்பால் கடலில் அலைகளை உடைய பாற்கடலின்
அளவு ஆம் எனின் அளவினது ஆகும் என்றால்
மற்று அதுவும் அன்றே அதுவும் சரி ஆகாது ;
வலை பால் விடம் வலை , அமுதம் , விஷம் ,
பிணைக் கண்ணியர் பெண் மான் இவை போன்ற கண்களை உடைய பெண்களின்
போகத்தில் மாலுறும் சிற்றின்பத்தில் பெரு மயக்கம் அடையும்
என் தலைப்பால் என் தலை மீது
கழல் அருள் உன் திருவடிகளை வைத்து அருள்வாயாக !
V.Sridhar