5. திருவரங்கத்து மாலை - 108/114 : அணுவான என் மனத்திலும் நீ இருக்கிறாய் !
முன்பு , ஆலிலை மகவு ஆகிய போது , இந்த மூதண்டங்கள்
உன்பால் ஒடுங்கி இருந்தது போலும் - உததி மங்கைக்கு
அன்பா ! அரங்கத்து என் ஆரமுதே ! அணுவாய் இருந்தும்
என்பால் அகண்டமும் ஆகிய நீ வந்து இருக்கின்றதே !
பதவுரை :
உததி மங்கைக்கு அன்பா திருப்பாற்கடலின் தோன்றிய திருமகளுக்குக் கணவனே !
அரங்கத்து என் ஆரமுதே திருவரங்கத்தில் இருக்கும் என் தேவாமிருதமே !
அணுவாய் இருந்தும் எனது மனம் மிகச் சிறியதாய் இருந்தாலும் ,
என்பால் அந்த என் சிறிய மனத்திடம்
அகண்டமும் ஆகிய நீ எல்லாம் ஆகிய நீ
வந்து இருக்கின்றதே வந்து எழுந்தருளி இருப்பது
முன்பு நீ முன்னே நீ
ஆலிலை மகவு ஆகிய போது ஆலிலையில் சிறு குழந்தையாய் கிடந்த போது
இந்த மூதண்டங்கள் இந்த பழைய அண்டங்கள் எல்லாம்
உன்பால் உன்னிடத்தில்
ஒடுங்கி இருந்தது போலும் அடங்கி இருந்ததை ஒத்தது
V.Sridhar