5. திருவரங்கத்து மாலை - 107/114 : பிற தேவரை உள்ளாது என் உள்ளம் !
தெள்ளா வரும் பொன்னி சூழ அரங்கா ! ஒரு தேவரையும்
உள்ளாது என் உள்ளம் ; யான் என் செய்வேன் ? விண்ணில் ஓர் உவணப்-
புள் ஆகி , வேதப் பொருள் ஆகி , உன்னைத் தன் பொற் கழுத்தில்
கொள்ளா வருகின்ற கோலம் உள்ளே கண்டு கொண்ட பின்னே
பதவுரை :
தெள்ளா வரும் பொன்னி தெளிவு இல்லாமல் கலங்கி வரும் காவிரி நதி
சூழ் அரங்கா சூழ்ந்த திரு அரங்க நாதனே !
விண்ணில் வானத்தில்
ஓர் உவணப் புள் ஆகி ஒப்பற்ற கருடப் பறவை ஆகி ,
வேதப் பொருள் ஆகி வேதார்த்த வடிவு உடையவராய் ,
தன் பொற் கழுத்தில் தனது பொன் மயமான கழுத்தில்
உன்னை கொள்ளா வருகின்ற கோலம் உன்னை ஏந்திக் கொண்டு வருகின்ற அழகை
உள்ளே கண்டு கொண்ட பின்னே என் மனத்தில் சேவித்த பின்னே
என் உள்ளம் என்னுடைய மனம்
ஒரு தேவரையும் உள்ளாது வேறொரு தேவரையும் தெய்வமாக மதியாது
யான் என் செய்வேன் நான் என்ன செய்ய முடியும் ?
V.Sridhar