5. திருவரங்கத்து மாலை - 105/114 : வெள்ளை மண் இட்டு , உள்ளம் வைத்தனனே!
விண் இட்ட சோலை அரங்கத்து மேவிய மெய்ப் பொருளை ,
கண் இட்ட பார்வையின் கட்டி , என் கண் வரக் கண்டு , உடலாம்
புண் இட்ட வண்ணக் குழியுள் பொதிந்து , புறத்து வெள்ளை
மண் இட்டு , இலச்சினை இட்டு , விள்ளாது உள்ளம் வைத்தனனே
பதவுரை :
விண் இட்ட சோலை அரங்கத்து வானளாவிய சோலைகலை உடைய திருவரங்கத்தில்
மேவிய மெய்ப் பொருளை விரும்பி இருக்கும் பர தத்துவத்தை
என் கண் வரக் கண்டு என்னிடத்தே வரப் பார்த்து
கண் இட்ட பார்வையின் கட்டி கண் வைத்த பார்வையினாலே கட்டி
உடலாம் புண் இட்ட ஊன் பொருந்திய உடல் ஆகிய
வண்ணக் குழியுள் பொதிந்து அழகிய சீலையுள் வைத்து மூடி ,
புறத்து வெள்ளை மண் இட்டு வெளியே வெண்மையான மண்ணை அப்பி
இலச்சினை இட்டு முத்திரை வைத்து விட்டு
விள்ளாது உள்ளம் வைத்தனனே நீங்காதபடி என் மனதில் வைத்தேன்
V.Sridhar