5. திருவரங்கத்து மாலை - 104/114 : தீவினைகாள் ! இங்கு தேங்காதீர் !
ஓங்கார வட்டத்து , மாசுணப் பாயில் உலோகம் உண்ட
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் - எபோழுதும் என்னை
நீங்காது இடர் செய்யும் தீவினைகாள் ! இனி நின்று நின்று
தேங்காது நீர் உமக்கு ஆன இடத்தே சென்று சேர்மின்களே
பதவுரை :
எபோழுதும் என்னை நீங்காது எக்காலத்திலும் என்னை விட்டுப் பிரியாமல்
இடர் செய்யும் தீவினைகாள் வருத்தத்தை செய்யும் பாவங்களே !
ஓங்கார வட்டத்து பிரணவாகார விமானத்துள்
மாசுணப் பாயில் ஆதிசேஷனுடைய படுக்கையில்
உலோகம் உண்ட பூங்கார் உலகங்களைவயிற்றில் வைத்து அருளிய அழகிய காளமேகம்
விழிக்குப் புலப்பட்டதால் எனது கண்களுக்கு விளங்கியதால்
இனி நீர் இனி நீங்கள் எல்லோரும்
நின்று நின்று தேங்காது இங்கு நிறைந்து நிற்காமல்
உமக்கு ஆன இடத்தே அந்த காட்டினிற்கே
சென்று சேர்மின்களே போய்ச் சேருங்கள்
V.Sridhar