Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 103/114 : எம்பெருமானது திரு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 103/114 : எம்பெருமானது திரு

    5. திருவரங்கத்து மாலை - 103/114 : எம்பெருமானது திருமேனியின் நீல நிறம்

    சோதித் திரு உரு ஆகாயம் ஆக , சுருதி நன்னூல்
    சாதித்து நின்று , தெளிந்து விட்டேன் - மிக்க தானவரைச்-
    சேதித்த நேமித் திருவரங்கா ! சங்கை தீர உன் தன்
    ஆதித் திரு உருவின் பேர் அணி நிறம் ஆன பின்னே

    பதவுரை :

    மிக்க தானவரை சேதித்த பெரும் கூட்டமான அசுரர்களை அழித்த
    நேமித் திருவரங்கா சக்கரத்தை உடைய திரு அரங்கா !
    உன் தன் ஆதித் திரு உருவின் உன்னுடைய முதன்மையான திரு உருவத்தின்
    பேர் அணி நிறம் பின்னே பெரிய அழகிய நீல நிறம் ஆகிய பின்பு
    சுருதி நன்னூல் சாதித்து நின்று சிறந்த வேத சாஸ்திரங்களைப் பழகி நின்று
    சோதித் திரு உரு தேஜோ மயமான உனது அழகிய ரூபம்
    ஆகாயம் ஆக ஆகாயம் போன்றது என்று
    சங்கை தீர தெளிந்து விட்டேன் சந்தேகம் இல்லாமல் தெளிவு கொண்டேன்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 24-12-13, 13:20.
Working...
X