5. திருவரங்கத்து மாலை - 97/114 : ஏழு மதில்களும் , திருவரங்க விமானமும்
அரு மறை ஓதிய ஓர் எட்டெழுத்தும் - அயன் படைத்த
இரு நில மீதினில் யாவரும் காண , இலங்கு துத்திக்-
குரு மணி நாகத்தில் எம் கோன் விழி துயில் கொண்டு அருள
திரு மதில் ஏழும் , விமானமும் , ஆகிச் சிறக்கின்றவே
பதவுரை :
அரு மறை ஓதிய அறிய முடியாத வேதங்களில் கூறிய
ஓர் எட்டெழுத்தும் ஒப்பற்ற திரு அஷ்டாக்ஷரமும் ,
அயன் படைத்த இரு நில மீதினில் பிரமன் படைத்த பெரிய பூமியில்
யாவரும் காண எல்லோரும் சேவிக்கும்படி
இலங்கு துத்தி விளங்கும் படப் புள்ளிகளையும்
குரு மணி நாகத்தில் பெரிய மாணிக்கங்களும் கொண்ட ஆதி சேஷனில்
எம் கோன் நம் பெருமாள்
விழி துயில் கொண்டு அருள யோக நித்திரை செய்து அருள்வதற்காக
திரு மதில் ஏழும் ஏழு திரு மதில்களும்
விமானமும் ஆகிச் சிறக்கின்றவே விமானமும் ஆகி மேன்மைப் படுகின்றன
V.Sridhar