5. திருவரங்கத்து மாலை - 95/114 : ஸ்ரீ வைகுண்டம்
எந்த உலகத்தும் மேலது ; நித்திய இன்பத்தது ;
பந்தம் நசிப்பது ; நித்தரும் முத்தரும் பாரிப்பது ;
முந்தை மறையின் நின்று அல்லாது , எத் தேவர்க்கும் முன்ன அரிது ;
அந்தம் இலது - அரங்கன் மேவு வைகுந்தம் ஆனதுவே
பதவுரை :
அரங்கன் மேவு அரங்கன் எழுந்தருளி இருக்கும்
வைகுந்தம் ஆனதுவே ஸ்ரீ வைகுண்ட உலகமானது
எந்த உலகத்தும் மேலது எல்லா உலகங்களுக்கும் மேலிடத்தில் உள்ளது ;
நித்திய இன்பத்தது எப்பொழுதும் அழியாத பேரின்பத்தை உடையது ;
பந்தம் நசிப்பது சம்சார பந்தத்தை அழிப்பது ;
நித்தரும் முத்தரும் பாரிப்பது நித்யர்களும் , முக்தர்களும் வாழ்வது ;
முந்தை மறையின் நின்று அல்லாது பழமையான வேதங்களின் வழி இல்லாமல்
எத் தேவர்க்கும் முன்ன அரிது வேறு வழியில் எந்ததேவர்க்கும் நினைக்க முடியாது ;
அந்தம் இலது அழிவு இல்லாதது
V.Sridhar