5. திருவரங்கத்து மாலை - 93/114 :சிறிய திருவடி (ஹனுமான்)
வல் ஆம் முலைத் திருவின் பெருமான் விட்ட வாகனம் போய்
தொல் ஆழி நீரைக் கடந்தது , தாளின் ; சுடர் இரண்டும்
செல்லாத ஊரைத் திரிபுரம் கண்டது ; சேனை வெள்ளம்
எல்லாம் உயக் கொண்டது , மருந்து ஆர் கிரி ஏந்தி வந்ததே
பதவுரை :
வல் ஆம் முலை சூதாடு கருவியை ஒத்த தனங்களை உடைய
திருவின் பெருமான் திருமகளின் தலைவன் ஆகிய நம் பெருமான் ராமன்
விட்ட வாகனம் போய் ஜானகியைத் தேடுவதற்காக அனுப்பிய ஹனுமான் போய்
தொல் ஆழி நீரைக் கடந்தது தாளின் பழைய கடல் நீரைத தனது கால்களால் தாண்டினார்
சுடர் இரண்டும் செல்லாத ஊரை சூரியன் , சந்திரன் இருவரும் நுழையாத இலங்கையை
திரிபுரம் கண்டது திரிபுரம் போல் அக்கினியால் எரித்தார் ;
மருந்து ஆர் கிரி ஏந்தி வந்தே சஞ்சீவினி மருந்து உள்ள துரோண மலையை எடுத்து வந்து
சேனை வெள்ளம் எல்லாம் வெள்ளம் போன்ற சேனைகளையும்
உயக் கொண்டது பிழைக்கச் செய்தார்
V.Sridhar