5. திருவரங்கத்து மாலை - 92/114 :சிறிய திருவடி (ஹனுமான் )
ஆதித் திரு எழுத்து ஐந்து உடைத்தாயும் , அரா அணிந்தும் ,
சோதித் திருக் கண்கள் மூன்றுடன் தோன்றும் - சுருதி சொன்ன
நீதிக்கு இசைய நடவா மனிதரை நேமி கொண்டு
வாதித்து அருளும் பெருமாள் அரங்கர் தம் வாகனமே
பதவுரை :
சுருதி சொன்ன நீதிக்கு வேதங்கள் கூறிய விதிகளுக்கு
இசைய நடவா மனிதரை பொருந்தும்படி நடக்காத மனிதர்களை
நேமி கொண்டு வாதித்து சக்கரத்தால் அழித்து
அருளும் பெருமாள் அரங்கர் தம் அருள் செய்யும் பெரிய பெருமாள் ஆன அரங்கனுடைய
வாகனமே வாகனம் ஆகிய ஹனுமான்
ஆதித் திரு எழுத்து ஐந்துமுதன்மையான பஞ்சாக்ஷரம் ஆன மந்திரத்தை
உடைத்தாயும் உடையவன் ஆகவும் ,
அரா அணிந்தும் பாம்புகளை ஆபரணமாக அணிந்தும் ,
சோதித் திருக் கண்கள் மூன்றுடன் சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய மூன்று கண்களோடும்
தோன்றும் சிவன் அம்சமாக தோன்றுவார்
V.Sridhar