Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 90/114 : பெரிய திருவடி (கருட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 90/114 : பெரிய திருவடி (கருட

    5. திருவரங்கத்து மாலை - 90/114 :பெரிய திருவடி (கருடன்)

    கருடன் வேத ஸ்வரூபன் !

    சிரம் , சேதனன் , விழி , தேகம் , சிறை , பின் சினை பதம் , கந்-
    தரம் , தோள்கள் ஊரு , வடிவம் , பெயர் , எசுர் , சாமமும் ஆம் ;
    பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி , அருள்
    சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்தி சுவணனுக்கே

    பதவுரை :

    தமது அடியார்க்கு தமது அடியார்களுக்கு
    பரந்தே உள்ள பாவங்கள் பாற்றி பரவி இருக்கும் தீவினைகளை அழித்து
    அருள் சுரந்தே அளிக்கும் அரங்கர் கருணை பொழிந்து அருளும் அரங்கருடைய
    தம் ஊர்தி சுவணனுக்கே வாஹனம் ஆன சுபர்ணன் எனப்படும் கருடனுக்கு
    சிரம் சேதனன் விழி தலை , உயிர் , கண்கள் ,
    தேகம் சிறை பின் சினை உடல் , சிறகுகள் , பின் புறம் ,
    பதம் கந்தரம் தோள்கள் ஊரு பாதங்கள் , கழுத்து , தோள்கள் , தொடை ,
    வடிவம் பெயர் உருவம் , திரு நாமம் ஆகிய யாவும்
    எசுர் சாமமும் ஆம் யஜுர் வேதமும் , சாம வேதமும் இவைகளின் சொரூபமே .

    V.Sridhar
Working...
X