5. திருவரங்கத்து மாலை - 87/114 :திருச் சக்கரப் படை
மோதித் திரை தவழ் நல் நீர் அரங்கர் , முடி முதலாம்
சாதிக் கதிர் மணிப் பேர் அணி ஆகி , தனஞ்செயன் போர்
பேதித்து , இரவு பகல் ஆக , விண்ணில் பிறழ்ந்து - செங்கேழ்ச்-
சோதித் திகிரி - திரு மேனி எங்கும் சுடர் விடுமே
பதவுரை :
மோதித் திரை தவழ் அலை எறிந்து வரும்
நல் நீர் அரங்கர் நல்ல காவிரி நதியால் சூழப்பட்ட திரு அரங்க நாதருடைய
செங்கேழ்ச் சோதித் திகிரி சிவந்த நிறம் கொண்ட ஒளியை உடைய சக்கரம்
முடி முதலாம் கிரீடம் முதலிய
சாதிக் கதிர் மணி சிறந்த ஒளியை உடைய இரத்தினங்கள் கொண்ட
பேர் அணி ஆகி பெரிய ஆபரணம் ஆகி
தனஞ்செயன் போர்அர்ஜுனனுடைய யுத்தத்தில்
இரவு பகல் ஆக பேதித்து பகல் இரவு ஆகும்படி மாற்றி
விண்ணில் பிறழ்ந்து ஆகாயத்தில் தோன்றி
திரு மேனி எங்கும் சுடர் விடுமே அவரது திரு மேனி முழுவதும் ஒளி வீசும்
V.Sridhar