Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர ம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர ம

    5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர மஹா மந்த்ரம்

    அத்தா !அரங்கத்து அமர்ந்தவனே ! எழுத்து ஆறு இரண்டின்
    வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ - விளைவு ஒன்று அறிய
    உத்தான பாதன் மகன் சலியாது , உலகு உள்ளளவும் ,
    எத தாரகைக்கும் முனிவர்க்கும் மேல் சென்று , இருக்கின்றதே ?

    பதவுரை :

    அத்தா !அரங்கத்து அமர்ந்தவனே ! தலைவனே ! திரு அரங்கத்தில் இருப்பவனே !
    விளைவு ஒன்று அறியா செய்யும் காரியத்திற்கு உண்டாகும் பலனை அறியாத
    உத்தான பாதன் மகன் உத்தான பாதன் மகன் ஆன துருவன்
    சலியாது சஞ்சலம் இல்லாமல்
    உலகு உள்ளளவும் உலகம் உள்ள வரையும்
    எத் தாரகைக்கும் முனிவர்க்கும் எல்லா நக்ஷத்திரங்களுக்கும் , ரிஷிகளுக்கும்
    மேல் சென்று இருக்கின்றதே மேலான இடத்தில் போய் இருப்பது
    எழுத்து ஆறு இரண்டின் ஸ்ரீ துவாதச மஹா மந்திரத்தின்
    வித்து ஆய விதை ஆகிய
    நின் அருள் கொண்டு அல்லவோ உனது கருணையினால் அன்றோ ?

    V.Sridhar

  • #2
    Re: 5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர &#2

    ஸ்வாமின் ஸ்ரீ துவாதச மஹா மந்திரமாவது யாது?

    Comment


    • #3
      Re: 5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர &am

      ஓம் நமோ பகவதே வாஸுதேவாய !


      நாரதர் துருவனுக்கு உபதேசித்தது !

      Comment


      • #4
        Re: 5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர &am

        துவாதஸா என்னும்போது 12 என்றாகிற்து ஆனால் தமிழில் 13 எழுத்து வருகிறது ஸம்ஸ்கிருதத்தில் ஓம் ஒரே எழுத்தாகக்கணக்கிடப்படுவதால் 12 எழுத்தாகிற்து இநத சந்தேகத்தால் தான் இக்கேள்வியை எழுப்பினேன். ச்ந்தேகம் தெளிவித்தமைக்கு நன்றி.

        Comment

        Working...
        X