Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 80/114 : எம்பெருமானது பரிக&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 80/114 : எம்பெருமானது பரிக&

    5. திருவரங்கத்து மாலை - 80/114 : எம்பெருமானது பரிகரங்கள் (ஏவலர் )

    பொங்கு அரவு என்பது மெல் அணை ; ஊர்தி வெம் புள் அரசு ;
    பங்கய மின்னொடு , பார் மகள் , தேவி ; படைப் பவன் சேய் ;
    கிங்கரர் விண்ணவர் ; சாதக நாடு இறை - கேடில் ஒன்றாய் ,
    அம் கண் நெடும் புவி எல்லாம் இடந்த அரங்கர்க்கே

    பதவுரை :

    கேடில் ஒன்றாய் ஒப்பற்ற வராஹ வடிவோடு
    அம் கண் நெடும் புவி எல்லாம் அழகிய இடத்தை உடைய நீண்ட பூமி முழுவதையும்
    இடந்த அரங்கர்க்கே கோட்டால் குத்தி எடுத்த அரங்கருக்கு
    பொங்கு அரவு என்பது சீறுகின்ற ஆதி சேஷன்
    மெல் அணை மெல்லிய படுக்கை ;
    ஊர்தி வெம் புள் அரசு உக்கிரமான கருடன் வாஹனம் ;
    பங்கய மின்னொடு தாமரையில் தோன்றிய மின்னல் போன்ற திரு மகளும் ,
    பார் மகள் தேவி நில மகளும் மனைவியர் ;
    படைப்பவன் சேய் படைக்கும் பிரமன் மகன் ;
    கிங்கரர் விண்ணவர் தேவர்கள் ஏவல் செய்பவர்கள் ;
    சாதக நாடு இறை ஸ்ரீ வைகுண்டம் இருப்பிடம்

    V.Sridhar


Working...
X