5. திருவரங்கத்து மாலை - 77/114 :ஸ்ரீ கல்கி அவதாரம்
தருமம் தவிர்ந்து , பொறை கெட்டு , சத்தியம் சாய்ந்து , தயை
தெருமந்து , தன பூசனை முழுதும் சிதைய , கலியே
பொரும் அந்தக் காலக் கடையினில் எம் பொன் - அரங்கன் அல்லால்
அருமந்த கற்கி என்று ஆரே , அவை நிலை ஆக்குவரே
பதவுரை :
தருமம் தவிர்ந்து தருமங்கள் விட்டு விலகி ,
பொறை கெட்டு பொறுமை அழிந்து ,
சத்தியம் சாய்ந்து உண்மை ஒழிந்து ,
தயை தெருமந்து அன்பு நிலை கலங்கி ,
தன் பூசனை முழுதும் சிதைய தனது பூஜை முற்றும் கெட ,
கலியே பொரும் பாவமே வெல்லும் ,
அந்தக் காலக் கடையினில் அந்தக் கலி யுகத்து முடிவில் ,
எம் பொன் அரங்கன் அல்லால் எமது அழகிய திரு அரங்க நாதன் அல்லாமல்
அருமந்த கற்கி என்று தேவாமிருதத்தைப் போன்ற கற்கி எனும் அவதாரம் எடுத்து
ஆரே அவை நிலை ஆக்குவரே வேறு யார் தாம் நிலை பெறச் செய்வார் ?
V.Sridhar