Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 75/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 75/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 75/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 25/25(நிறைவு)

    பொரும் கேதனப் படை மன்னரை மாய்த்துப் புவி மடந்தை
    பெரும் கேதம் நீக்கி நடந்தது மீளப் பிறங்கு புள்ளின்
    வரும் கேசவன் சக்ர மாயோன் அரங்கன் வரவிடுத்த
    கரும் கேசம் ஒன்று தன் இச்சையிலே செய்த காரியமே

    பதவுரை :

    பொரும் பாரதப் போர் செய்
    ,
    கேதனப் படை கொடிகள் கொண்ட படைகளை உடைய
    மன்னரை மாய்த்து அரசர்கள் அனைவரையும் அழித்து ,
    புவி மடந்தை பெரும் கேதம் நீக்கி பூமி தேவியின் பெரிய பாரத்தைக் குறைத்து ,
    மீள நடந்தது மீண்டும் வைகுண்டத்திற்குத் திரும்பியது :
    பிறங்கு புள்ளின் வரும் விளங்குகின்ற கருடன் மேல் எழுந்தருளும்
    கேசவன் கேசவன் எனும் திரு நாமம் உடையவனும் ,
    சக்ர மாயோன் சக்ராயுதத்தை உடையவனும் , மாயங்கள் செய்பவனுமான
    அரங்கன் வரவிடுத்த திரு வரங்கன் ஆகிய திருமால் அனுப்பிய
    கரும் கேசம் ஒன்று கரிய கூந்தல் ஒன்று
    தன் இச்சையிலே செய்த காரியமே தன விருப்பத்தின் படி செய்த காரியம் ஆகும்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-12-13, 21:33.
Working...
X