Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 74/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 74/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 74/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 24/25 (பால பாலன் !)

    தாளால் சகம் கொண்ட , தார் அரங்கா ! பண்டு சாந்திபன் சொல்
    கேளா , கடல் புக்க சேயினை மீட்டதும் , கேதமுடன்
    மாளாப் பதம் புக்க மைந்தரை மீட்டதும் , மாறு அலவே
    மீளாப் பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே

    பதவுரை :

    தாளால் சகம் கொண்ட திருவடியால் உலகை அளந்து வசப்படுத்திய
    தார் அரங்கா மாலையை உடைய அரங்கா !
    பண்டு சாந்திபன் முன்பு கிருஷ்ணனாக தன் குரு சாந்தீபினியின்
    சொல் கேளா சொல்லைக் கேட்டு
    கடல் புக்க கடலில் முழுகி இறந்து போன
    சேயினை மீட்டதும் அவரது மகனை மீண்டும் கொண்டு வந்ததும்
    கேதமுடன் மாளாப் பதம் புக்க வருத்தத்துடன் பாதாள உலகம் அடைந்த
    மைந்தரை மீட்டதும் தேவகியின் குழந்தைகள் ஆறு பேரையும்
    மீளாப் பதம் புக்க திரும்பவே முடியாத ஸ்ரீ வைகுண்டம் அடைந்த
    பாலரை வைதீகன் ஒருவனது புத்திரனையும்
    நீ அன்று மீட்டதற்கே திரும்ப கொண்டு வந்ததற்கு
    மாறு அலவே ஒப்பு ஆக மாட்டாது


    V.Sridhar
Working...
X